இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிசர் சூர்யா நடிப்பில் 2005 -ம் ஆண்டு கஜினி திரைப்படம் வெளியானது. இதில் அசின் நயன்தாரா எனப் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கஜினி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் ஹீரோவாக அமீர் கான் நடித்திருப்பார்.
சமீபத்தில் அமீர் கான் நடிப்பில் வெளியான லால்சிங் சத்தா படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து அமீர் கான் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.
இந்நிலையில் அமீர் கான் கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான திரைக்கதை உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.







