NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் (69), சென்னை அடையாறில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவால் இருந்தார்.

இந்நிலையில், உமா ரமணன் நேற்று காலமானார். அவரது மறைவால் இசை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். தீபன் சக்ரவர்த்தி உடன் இணைந்து அந்தப் பாடலை அவர் பாடி இருந்தார்.

கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே என்னை தொடு, திருப்பாச்சி உள்பட பல்வேறு படங்களில் பின்னணி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles