சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் ஃபாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா திரைப்படம் பான் இந்தியா வெற்றிப் படமாக மாறியது. அந்த படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.கமல்ஹாசன் நாயகன் படத்தில் வரதராஜ முதலியார் என்ற கேங்ஸ்டராக நடித்து தேசிய விருது வென்றதை போல செம்மரக் கடத்தல் தொழிலை செய்யும் புஷ்ப ராஜாக நடித்து அல்லு அர்ஜுனும் தேசிய விருது வென்றார்.புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜீன்.







