NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வதந்தி பார்த்து பதறிய எதிர்நீச்சல் சீரியல் நடிகர் – வேல ராமமூர்த்தி

சன் தொலைக்காட்சியில் ஓடிய தொடர்களை யாருமே மறக்க மாட்டார்கள். அப்படி டிஆர்பியிலும், கதையிலும் சாதனை படைத்த ஒரு தொடர் தான் எதிர்நீச்சல்.

இந்த நிலையில் மாரிமுத்து இறப்பிற்கு பிறகு குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்து வந்தார்.

சீரியல் முடிந்த பிறகு வேலராமமூர்த்தி ஒரு பேட்டியில், எதிர்நீச்சல் சீரியலில் நடித்ததை அவமானமாக நினைக்கிறேன் என்றும் அதனால் வேதனையில் இருக்கிறேன் என அவர் கூறியதாக தகவல் வைரலானது.

இதுகுறித்து வேலராமமூர்த்தி தனது இன்ஸ்டாவில், “எதிர்நீச்சல் சீரியல் என்னை உலக தமிழர்கள் எல்லோரிடமும் கொண்டு போய் சேர்த்துள்ளது.

அதில் நான் மனப்பூர்வமாய் பங்கேற்றினேன் என்பதே உண்மை. தயவு செய்து இது போன்ற பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.

Share:

Related Articles