NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஜய்-யின் அரசியல் பிரவேசம் என்னை கவர்ந்தது – அருண்பாண்டியன்

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கினார்.

இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர், சினிமா உலக பிரமுகர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துகள், விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அருண்பாண்டியன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு இடையில் பிரச்சினைகள் இருந்தன. நானும் அவருடன் பல சமயங்களில் சண்டையிட்டு இருக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தில் அவரது அரசியல் பிரவேசம் என்னை மிகவும் கவர்ந்தது. எல்லோரும் தாங்கள் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது இதைச் செய்யமாட்டார்கள். நான் அவரைப் பாராட்டுகிறேன்.

அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை நான் உண்மையிலேயே மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அருண்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles