NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமிதாப் பச்சனுக்கு ரூ.10 லட்சம்(இந்திய பெறுமதி) அபராதம் விதிக்க CID கோரிக்கை

Online வணிகத் தளமான “Filipkart” ஒவ்வொரு ஆண்டும் “The Big Billionday” என்ற நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகிறது.

அதில் Bollywood நடிகர் அமிதாப்பச்சன் நடித்துள்ளார். இந்த விளம்பரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விளம்பரத்தில் Filipkartல் தருவது போன்ற சலுகை சில்லறை விற்பனைக் கடைகளில் நிச்சயம் கிடைக்காது என்று அமிதாப் பச்சன் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நுகர்வோரை தவறாக வழி நடத்தும் இந்த விளம்பரத்தை தடை செய்யவும், நடிகர் அமிதாப் பச்சனுக்கு ரூ.10 (இந்திய பெறுமதி) லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் புகாரளித்துள்ளது.

Share:

Related Articles