ஓம் ரனாவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வருகிற 16ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ்.
கீர்த்தி சானோன், சைஃப் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தை பார்த்த சென்சார் குழுவின் உறுப்பினரும், பிரபல திரைப்பட விமர்சகருமான உமைர் சந்துஆதிபுருஷ் படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர்.
இதில், ஒரே வார்த்தையில் ஆதிபுருஷ் – டார்ச்சர் என பதிவு செய்துள்ளார். மேலும் பிரபாஸ், கீர்த்தி சானோன் துரதிர்ஷ்டம் தொடர்கிறது என்றும் கூறியுள்ளார்.
படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு மோசமாக இருக்கிறது என்றும், பிரபாஸ் நடிப்பு பள்ளி சென்று நடிப்பை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
திரையரங்கில் படத்திற்கு மக்கள் எப்படி வரவேற்பை தரப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.