NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆதிபுருஷ் பட டிரைலர் வெளியீட்டிற்கு Kriti Sanon அணிந்து வந்த புடவை இத்தனை லட்சமா?

பாகுபலி பட புகழ் நாயகன் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படம் இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

ராமனாக பிரபாஸ் நடிக்க சீதாவாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிக்க இராவணனாக நடிகர் சையிப் அலிகான் நடித்திருக்கிறார். ரூ. 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இப்படம் வரும் ஜுன் மாதம் 16ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.பட ரிலீஸிற்கு தயாராகியுள்ள நிலையில் டிரைலர் அண்மையில் மும்பையில் வெளியிடப்பட்டது.

இப்பட டிரைலர் ரிலீஸிற்காக கீர்த்தி சனோன் அணிந்து வந்திருந்த சேலை 24 கேரட் தங்கம் கலந்து உருவாக்கப்பட்டதாம்.

அவர் அணிந்திருந்த பிளவுஸில் மரகத கற்கள் டிசைனுக்காக பயன்படுத்தப்பட்டு இருந்ததாகவும், சீதையின் தூய்மையை பறைசாற்றும் விதமாக தூய துணிகளைப் பயன்படுத்தி இந்த சேலையை தயார் செய்ததாக அதன் டிசைனர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் மதிப்பு நிச்சயம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.  

Share:

Related Articles