தற்போது சினிமா துறையினை பொறுத்தவரை விவாகரத்து என்பது ஒரு கலாச்சாரமாக மாறிவருகிறது . அந்தவகையில் தற்போது நடிப்பு, இசை என பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து குறித்துவெளியான ஒரு தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது.

ஜி.வி.பிரகாஷ் குமார். தனது பள்ளி தோழியும், பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மேலும் கடந்த ஆண்டில் இருவரும் தங்களுக்குள் கருத்துவேறுபாடு இருப்பதாகவும் இதனால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாகவும் கூறியிருநுத நிலையில், இவர்களின் விவாகரத்திற்கு நடிகை திவ்யபாரதிதான் காரணம் எனவும் சர்ச்சைகள் கிளம்பியிருந்தன.

இதுகுறித்து நடிகை திவ்ய பாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , எனக்கும் இந்த விவாகரத்துக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை எனவும்
இவர்களின் தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் தன்னுடைய பெயர் இழுக்கப்பட்டுள்ளது எனவும் ஜி.வி.யின் குடும்ப பிரச்சனைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் .
மேலும் தான் ஒருபோதும் தன்னுடன் இனைந்து நடிக்கும் நடிகர்களுடனும், குறிப்பாக திருமணமான ஆண்களுடன் டேட்டிங் செல்ல மாட்டேன் அதில் எனக்கு விருப்பம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
