NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரண்டாவது போஸ்டரை வெளியிட்ட LGM படக்குழு

இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. LGM படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் LGM படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வேனுக்குள் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் குடும்பத்துடன் இருக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share:

Related Articles