NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘கல்கி 2898 ஏ.டி’ படத்தின் ட்ரைலர் வெளியிட்டு திகதி அறிவிப்பு

நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கல்கி 2898 ஏ.டி.’ படத்தில் நடிக்கிறார்.

தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. 

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வரும் 10 ஆம் திகதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் வரும் 27 ஆம் திகதி திரைக்கு வருகிறது.

Share:

Related Articles