NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கவனம் ஈர்க்கும் திரு மாணிக்கம் டீசர்

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம்.

இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை

எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பரபர காட்சிகளை கொண்ட டீசரில் படத்தின் வசனம் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது. டீசரின் முடிவில் வரும் தவறெனின் வலியதும் வீழும்..

சரியெனின் எளியதும் வாழும் என்ற வசனம் இடம்பெற்று இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் அப்டேட் விரைவில் எதிர்பார்க்கலாம்.

Share:

Related Articles