NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

`காட் பிளஸ் யூ மாமே’ – மாஸான போஸ்டர்

நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தை மார்க் ஆண்டனி புகழ்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக்கில் இதுவரை அஜித்தை பார்த்திராத லுக்கில் இருந்தார். தற்பொழுது படத்தின் செக்கண்ட் லுக்

காட் பிளஸ் யூ மாமே’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இதில் கழுத்தில் கர்ச்சீஃப் கட்டிக்கொண்டும் 63 என்ற எண்ணுடைய சிறை சீருடை மற்றும் கண்ணில் கூலர்ஸ் மற்றும் கண்ணில் கூலர்ஸ் அணிந்து ஸ்வேக்-காக உள்ளார்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அஜித் அணிந்திருக்கும் கண்ணாடியில் பில்லா அஜித்தின் புகைப்படம் இருக்கிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் எம்மாதிரியான கதையை இயக்குகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சத்திற்கு சென்றுள்ளது.

Share:

Related Articles