NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கைவசம் படங்கள் இருக்க பயமேன்- சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ் கே 23 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அமரன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் எஸ்கே 23ல் நடிக்கவுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட திரையுலகம் மூலம் பிரபலமான இளம் நடிகை ருக்மிணி வசந்த் நடித்து வருகிறார்.ஆனால், இப்படத்தில் முதன் முதலில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவிருந்தது ராஷ்மிகா மந்தனா தானாம். அப்போது ராஷ்மிகாவின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் அவருக்கு பதிலாக ருக்மிணி தேர்வாகியுள்ளார் என கூறப்படுகிறது.

Share:

Related Articles