சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தினை ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத் ஆகியோரை வைத்து எடுத்து இருக்கிறார் P.வாசு. படத்தின் படபிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகளை படக்குழு செய்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தி சிறப்பாக சந்திரமுகி 2வெளியாக இருப்பதாக ஏற்கனவே படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரமுகி 2 படத்திற்கு “MM கீரவாணி” தான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தான் சந்திரமுகி 2 முழு படத்தையும் பார்த்துவிட்டதாக கீரவாணி Twitterல் பதிவிட்டு இருக்கிறார்.
“சந்திரமுகி 2 படம் பார்த்தேன். இந்த படத்தின் கதாபாத்திரங்கள் மரணபயத்தில் பல இரவுகள் தூங்காமல் இருப்பார்கள். நான் கடந்த 2 மாதங்களாக இரவு பகலாக தூங்காமல் படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறேன்” என கீரவாணி கூறி இருக்கிறார்.







