NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீரியல் நடிகராக களமிறங்கும் ‘சினேகன்’

புத்தம் புது பூவே திரைப்படம் மூலம் திரைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகமானார் சினேகன்.

இதுவரைக்கும் 600 திரைப்பட பாடல்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார், 50 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இவர் இப்போது புதிய தொடர் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

‘கலைஞர்’ தொலைக்காட்சியில் தயாராக போகும் இந்த தொடரை யாரடி நீ மோகினி, நினைத்தாலே இனிக்கும் சீரியல் புகழ் பிரியன் இயக்க இருக்கிறாராம்.

‘பவித்ரா’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரில் சினேகன், அனிதா சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

Share:

Related Articles