NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜான்வி கபூர் தமிழில் நடிக்க போடும் கண்டிஷன்! என்ன தெரியுமா?

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். மேலும் அவர் தெலுங்கில் NTR30 படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் மூலமாக அவர் தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார்.

அதே நேரத்தில் தமிழில் அவர் நடிப்பது எப்போது என்று தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அது தற்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என.

ஜான்வி கபூர் தமிழில் நடிக்க இயக்குனர்கள் கதை சொல்ல போனால் முதலில் ஹீரோ யார், தயாரிப்பாளர் யார் உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டுவிட்டு தான் கதை கேட்கவே ஓகே சொல்வாராம்.

மேலும் தான் நடிக்க வேண்டும் என்றால் சம்பளம், ஷூட்டிங்கில் பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களிலும் கண்டிஷன் போடுகிறாராம். சமீபத்தில் பையா 2 படத்தில் நடிக்க லிங்குசாமி ஜான்வியை அணுகிய நிலையில், அதை நிராகரித்துவிட்டார் ஜான்வி என்பது குறிப்பிடத்தக்கது. 

Share:

Related Articles