நடிகர் சசிகுமார் , நடிகை சிம்பரன்,யோகிபாபு , ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்திருக்க கூடிய திரைப்படம்தான் டூரிஸ்ட் பேமிலி. அறிமுக இயக்குனரான அபிஷன் ஜீவித்தன் இயக்கியிருக்க கூடிய குறித்த திரைப்படம் தொழிலார் தினத்தன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து வந்த ஒரு குடும்பம் சென்னையில் வசித்து வருகிற நிலையில், அவர்களின் வாழ்கையிமுறை பற்றியும் , குடும்பத்தில் ஏற்டபடும் மாற்றங்கள் தொடர்பிலும் மிகவும், யதார்த்தமான முறையில் மக்களுக்கு எடுத்து கூறியிருக்க கூடிய குறித்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரா மணியன் தன்னுடைய எக்ஸ் தல பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் என்னுடைய மனதை ஈர்த்த ஒரு கதையாக காணப்படுகிறது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் எனக்காட்டும் ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது.
இவரை போன்ற பலரும் திரைப்படத்தை புகழ்ந்தும் திரைக்கதையின் கதா பாத்திரங்களை புகழ்ந்தும் கூறியுள்ளமை குறிப்பிட தக்கது .