NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனது திருமணம் பற்றி கூறிய தமன்னா

நடிகை தமன்னா, ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவைக் காதலித்து வருகிறார். ஒப்புக்கொண்டார். இருவரும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரில் இணைந்து நடித்துள்ளனர்.

இதில் நடிக்கும்போது காதல் மலர்ந்தது. விஜய் சர்மா தனது மகிழ்ச்சிக்கான இடத்தில் இருப்பதாக தமன்னா கூறியிருந்தார். இந்நிலையில் திருமணம் பற்றியும் பேசியுள்ளார்.

நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பும்போது அதை செய்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால் அது பெரிய பொறுப்பு. அதற்கு எப்போது தயாராக இருக்கிறீர்களோ, அப்போது செய்யுங்கள். எல்லோரும் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதற்காகச் செய்துகொள்ள முடியாது.

நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகைகளுக்கான வாழ்க்கை பத்து வருடங்களுடன் முடிந்துவிடும் என்றே நினைத்தேன். அதனால், 30 வயதில் நான் திருமணம் செய்துகொண்டு குழந்தை களைப் பெற்றிருப்பேன் என எண்ணினேன். ஆனால், 30 வயதில், நான் மீண்டும் பிறந்ததாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles