NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழ் திரையிசை உலகில் பெரும் பங்காற்றி வரும் Viaji TVன் “Super singer”

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான Viaji TVயில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் “Super singer” கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி வருகின்றனர்.

விஜய் டிவி super Singer நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொள்ளும் இசையமைப்பாளர்கள் பலருக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் ஏழ்மை நிலையில் இருக்கும் திறமையாளர்கள் பலர் இந்நிகழ்ச்சி மூலம் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது சிறுவர்களுக்கான Super Singer Season 9 நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியிலும் பல நெகிழ்வான தருணங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த வாரம் நிகழ்ந்த super Singer நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிறுவன் “கலர்வெடி கோகுல்”, தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை, கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

இசையமைப்பாளர் தமன். இந்நிகழ்ச்சியின் போது வரும் தீபாவளிக்குள் ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், அவர் அண்ணண் பாடல் எழுதவும், கலர்வெடி கோகுல் பாடவும் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார்.

ஒரு போட்டி நிழச்சியாக மட்டுமல்லாமல் Super Singer நிகழ்ச்சி திறமையால் ஒளிரும் பலருக்கு மாற்றம் தந்து வருகிறது என்பதும் குறிப்பிடதக்கது.

Share:

Related Articles