NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தளபதி 68 அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லியோ’.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லியோ படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது. எனினும், எத்தனை மணிக்கு டிரைலர் வெளியாகும் என்பது பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 68 பற்றிய அப்டேட்-ஐ அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்துள்ளார்.

இது குறித்த தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

Share:

Related Articles