NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திருநங்கை செயற்பாட்டாளர் வாழ்க்கை வரலாற்றில் பிரபல ஹிந்தி நடிகை “சுஷ்மிதா சென்”

பிரபல ஹிந்தி நடிகையான சுஷ்மிதா சென், தமிழில் “ரட்சகன்” படத்தில் நாயகியாக நடித்தார். பின்னர் ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அவர் இப்போது பிரபல திருநங்கை செயற்பாட்டாளர் “Srigauri Sawant” வாழ்க்கைக் கதையில் நடிக்கிறார்.

மும்பையைச் சேர்ந்த “Srigauri Sawant” திருநங்கைகளுக்காகக் குரல் கொடுத்து வருபவர். அவர்களின் உரிமைகளுக்காக, பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளார். அவர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு “தாலி”என்ற web தொடர் உருவாகியுள்ளது.

தேசிய விருது பெற்ற “ரவி ஜாதவ்” இந்த Web தொடரை இயக்கி உள்ளார். இதன் Teasar சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம், “Jio Cinema” OTT தளத்தில் August 15 வெளியாகிறது.

Share:

Related Articles