NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் விஜய் நடித்த ‘கண்ணுக்குள் நிலவு’, அஜித் நடித்த ‘ஆழ்வார்’, சூர்யா நடித்த ‘வேல்’, விக்ரம் நடித்த ‘தெய்வத்திருமகள்’ உட்பட பல படங்களை தயாரித்துள்ளார்.

தயாரிப்பாளர் மோகன் நடராஜன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

ஸ்ரீ ராஜகாளியம்மன் முவீஸில் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் தயாரித்த படங்கள்,

சுரேஷ், நதியா நடிப்பில் ‘பூக்களை பறிக்காதீர்கள்’, விஜயகாந்த், நதியா நடித்த ‘பூ மழை பொழியுது’, சுரேஷ், நதியா நடித்த ‘இனிய உறவு பூத்தது’, பிரபு, ரூபிணி நடித்த ‘என் தங்கச்சி படிச்சவ’, பிரபு, கௌதமி நடித்த ‘பிள்ளைக்காக’, அர்ஜுன், ரூபினி நடித்த ‘எங்க அண்ணன் வரட்டும்’, சத்யராஜ் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் மோகன் நடராஜனுக்கு நடிகர்கள், திரைப்பட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மோகன் நடராஜன் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

Share:

Related Articles