NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நயன்தாரா பட இயக்குனருடன் இணைந்த ஜெய்

கடந்த 2017-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார். இப்படத்தை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மனுஷி’ படத்தை இயக்கினார்.

இப்படம் குறித்த தகவல் எதுவும் பின்னர் வெளியாகவில்லை.

இயக்குநர் கோபி நயினார் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ஆர்.ஆர்.பிலிம் மேக்கர்ஸ் மற்றும் ஏ.ஜி.எல் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘கருப்பர் நகரம்’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

மேலும் இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Share:

Related Articles