NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நேரடியாக டிவியில் ரிலீசாகும் கார்த்திக் ராஜின் பிளாக் அண்ட் வைட் திரைப்படம் – சின்னத்திரையில் இதுவரை யாரும் செய்யாதது

கார்த்திக் ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பிளாக் அண்ட் வைட் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஆபீஸ் சீரியல் மூலமாக அறிமுகமாகி அதன் பிறகு செம்பருத்தி என்ற சீரியலில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் கார்த்திக் ராஜ்.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகிய இவர் அதன் பிறகு ரம்யா பாண்டியனுடன் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றில் நடித்தார்.

மேலும் தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்து கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். செம்பருத்தி சீரியலை போல இந்த சீரியலும் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் கார்த்திக் ராஜ் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளாக் அண்ட் வைட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. லாக் டவுனால் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த கார்த்திக்கின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது? வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்படும் நிலையில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.ஏற்கனவே படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படம் நேரடியாக டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. ஆமாம், வரும் மே 14-ம் தேதி ஞாயிறு மாலை 4.00 மணிக்கு இத்திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு கார்த்திக் ராஜ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் டிஆர்பி ரேட்டிங்கிலும் பெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விறுவிறுப்பான கதைக்களத்துடன் நேரடியாக சின்னத்திரையில் வெளியாகும் பிளாக் அண்ட் வைட் திரைப்படத்தை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Share:

Related Articles