NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபாஸுக்கு இவர் தான் வில்லனா?

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் (Project K). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.

மேலும், இந்த படத்தில் அமிதாப் பச்சன், திஷா பதா னி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை விஜயசாந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பான் இந்திய படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் இவர் நடிக்கும் காட்சிகள் 20 நாட்களில் படமாக்கப்படவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles