NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பூங்குழலி மற்றும் வானதியுடன் மும்பையில் அருண்மொழி வர்மன்.. வைரலாகும் புகைப்படம்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் -2 படக்குழு புரொமோஷனுக்காக மும்பைக்கு சென்றுள்ளனர். அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி (பூங்குழலி) மற்றும் சோபிதா துதிபாலா (வானதி) இருவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பூங்குழலி மற்றும் வானதியுடன் மும்பையில் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Share:

Related Articles