NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெண்கள் பாதுகாப்பு என்பதை அடிப்படையாக வைத்து பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு இந்த வார இறுதியில் கமல் ஹாசன் தெளிவுப்படுத்த வேண்டும் Bigg Boss -வனிதா

“Bigg Boss” Season 7 தற்போது விறுவிறுப்பாக போய்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், வனிதா, பிரதீப் போட்டியிலிருந்து வெளியேறிய விடயம் தொடர்பாக தனியார் YouTube சேனலுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில் Bigg Boss வீட்டில் நடக்கும் யதார்த்தமான சில விடயங்கள் தொடர்பில் மனம் திறந்துள்ளார்.

 “கதவை திறந்து வைத்துக்கொண்டுதான் பாத்ரூம் போனேன் என்று பிரதீப்பே ஒத்துக்கொண்டார்.

அதற்கு பிறகுதான் அவர் வெளியேற்றப்பட்டார். அதேபோல் பெண்கள் பாதுகாப்பு என்ற வார்த்தையை நாங்கள் குறிப்பாக நான் பயன்படுத்தவே இல்லை என்பதையும் ஜோவிகா நேற்று விசித்திராவிடம் தெளிவுப்படுத்திவிட்டார்.

பெண்கள் பாதுகாப்பு என்பதை அடிப்படையாக வைத்து பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு இந்த வார இறுதியில் கமல் ஹாசன் தெளிவுப்படுத்த வேண்டும்.

பெண்கள் பாதுகாப்புக்காக பிரதீப்பை எதன் அடிப்படையில் வெளியேற்றினோம் என்று தெளிவுப்படுத்தவில்லை என்றால் நானோ அல்லது எனது மகளோ வழக்கு தொடுப்போம்.

ஏனெனில் பெண்கள் பாதுகாப்பு என்ற வார்த்தையை முதலில் ஜோவிகா பயன்படுத்தவே இல்லை. அப்படி இருக்கும்போது அவள் மீது அப்படி ஒரு பெயர் வந்திருக்கிறது. எனவேதான் சேனல் தரப்பு தெளிவுப்படுத்த வேண்டும்” என்றார்.

Share:

Related Articles