NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மது போதையில் கார் ஓட்டியதாக பரவும் வதந்தி நடிகை மதுமிதா விளக்கம்

‘எதிர்நீச்சல்’ தொடரில் நடித்து பிரபலமான நடிகை மதுமிதா, தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் மீது அவரது கார் மோதியது.

மதுமிதா மீது பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், சிறு காயங்கள் ஏற்படுத்துதல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே மதுமிதா மது போதையில் வாகனம் ஓட்டியதாக தகவல்கள் பரவின. இது குறித்து நடிகை மதுமிதா தற்போது விளக்கமளித்துள்ளார்.

அதில் எந்த உண்மையும் இல்லை. எனக்கு மதுப்பழக்கம் கிடையாது. ஒரு சிறிய விபத்து நடந்தது உண்மைதான். அந்த போலீஸ்காரர் தற்போது நலமுடன் இருக்கிறார். நானும் நலமாக இருக்கிறேன். எனவே போலியான செய்திகளை தயவு செய்து நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles