நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் `லூசிஃபர்’. திரைப்படம் மக்களை அதிகம் ஈர்த்ததன் காரணமாக பாகம் இரண்டிற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது.
அந்த வகையில் இத்திரைப்படத்தின் பாகம் இரண்டு கடந்த 27 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியாகி தற்போது 11 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது 250 கோடி வசூலை குவித்துள்ளது .
தற்போது இத்திரைப்படம் முன்னதாக மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தின் சாதனையை ‘எம்புரான்’ திரைப்படம் முறியடித்துள்ளது.