NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் விஜய் டிவியில் Ready Steady Po- தொகுத்து வழங்கப்போவது இவர்களா?

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிறைய ஷோக்கள் உள்ளது, சில நிகழ்ச்சி வந்த இடம் தெரியாமல் போனது.

ஆனால் ஒரு சில நிகழ்ச்சிகள் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நினைக்கும் நிகழ்ச்சிகள் பல உள்ளது.

அப்படி ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு ஷோ தான் Ready Steady Po. ரியோ மற்றும் ஆண்ட்ரூஸ் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது என பல குற்றச்சாட்டுகள் வந்தது.

தற்போது 3வது சீசன் குறித்து சூப்பரான தகவல் வந்துள்ளது, விரைவில் Ready Steady Po நிகழ்ச்சியின் 3வது சீசன் வரப்போகிறது, அந்த புதிய நிகழ்ச்சியை பாக்கியலட்சுமி சீரியல் புகழ் விஷால் மற்றும் ரக்ஷன் இருவரும் முதன்முறையாக கூட்டணி அமைத்து நடத்த இருக்கிறார்களாம்.

Share:

Related Articles