NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஜய் சேதுபதியின் 50-வது படம் – மகாராஜா ரிலீஸ்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் “மகாராஜா.” குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் திகதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது.

Share:

Related Articles