NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வினுஷா இதனால் தான் ‘Big Boss’  போகவில்லை

பாரதி கண்ணம்மா‘ தொடர் நடிகை வினுஷா ‘Big Boss’ 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவர் இருப்பதே தெரியாத அளவுக்கு தான் இருந்தது. அதனால் அவர் ஒருகட்டத்தில் Eliminate ஆகிவிட்டார்.

அவர் Eliminate ஆகி வெளியில் வந்த பின் தான் நிக்சன் அவரது உடலை பற்றி மிகவும் மோசமாக பேசி இருந்தது தெரியவந்து நிக்சன் பற்றி கோபமாக அவர் வெளியிட்ட அறிக்கையும் வைரல் ஆனது.

Big Boss வீட்டுக்குள் மீண்டும் மூன்று பழைய போட்டியாளர்கள் Wild Card எண்ட்ரியாக வர இருக்கிறார்கள் என அறிவிப்பு வந்ததும், அதில் வினுஷாவும் உள்ளே செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. 

வினுஷா வீட்டில் இல்லை என்றாலும், தற்போது அர்ச்சனா தான் வினுஷா பெயரை சொல்லி நிக்சனை விளாசி வருகிறார். இதனால் ஷோவே பரபரப்பாக மாறி இருக்கிறது. வினுஷா பற்றி பேசும் அர்ச்சனாவை சொருகிடுவேன் என நிக்சன் கொலை மிரட்டல் விடுத்ததும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் வினுஷா தான் ஏன் Big Boss செல்லவில்லை என்ற காரணத்தை கூறி இருக்கிறார். அவர் Hosptialல் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அவர் உடல்நிலை காரணமாக தான் Big Boss செல்லவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. 

Share:

Related Articles