NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விமர்சனம் என்ற பெயரில் அவதூறு – நடிகை “ஹூமா குரேஷி”

ஹிந்தி நடிகை “ஹூமா குரேஷி” தமிழில் காலா, வலிமை ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், விமர்சனம் என்ற பெயரில் நடிகர்களை அவதூறாகப் பேசுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “திரைப்படங்களை விமர்சனம் செய்வதை விட சிலர் விமர்சனம் என்ற பெயரில் நடிகர்களை அவதூறாகப் பேசுகிறார்கள்.

படம் பிடிக்கவில்லை என்றால் பிரச்சினையில்லை. அது அவர்கள் விருப்பம். ஆனால், ஏன் தனி நபர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்? இது எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் நடந்திருக்கிறது.

விமர்சகருக்குப் படம் பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாம். அதற்காகத் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசவோ, உருவக் கேலி செய்யவோ வேண்டாம்.

எதிர்மறை கருத்துகள் கண்டிப்பாகப் பாதிப்பை ஏற்படுத்தும். என்னைப் பற்றியோ, என்படம் பற்றியோ மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சமூக ஊடகங்கள் மூலம் தெரிந்துகொள்வதில் மகிழ்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles