NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த ராஜா ராணி ஜோடி

2013 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் நஸ்ரியா, நயன்தாரா, ஆர்யா மற்றும் ஜெய் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ராஜா ராணி திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் மூலம் அட்லி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார், இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வெற்றிப் பெற்றது. காதலர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு மாபெரும் ரசிகர் பட்டாளமே இன்றும் இருக்கிறது.

நஸ்ரியா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து நடித்தது அப்படத்தில் மட்டுமே. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து படத்தில் நடிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர் ஆனால் அது இதுவரை நடக்கவே இல்லை.

ஆனால் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கும் விதமாக நஸ்ரியா மற்றும் நயன்தாரா 10 வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட புகைப்படங்களை நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விக்னேஷ் சிவன் , நயன்தாரா, நஸ்ரியா மற்றும் ஃபஹத் பாசில் ஒன்றாக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

அப்புகைப்படத்திற்கு ‘இறுதியாக… இந்த நாளுக்காக’ என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். நஸ்ரியாவும் இப்படத்தை பகிர்ந்து யூ கய்ஸ் ஆர் தி ஸ்வீட்டஸ்ட், க்யூட்டஸ் அண்ட் பெஸ்ட் என்ற தலைப்பில் பதிவிட்டார்.

பல வருடங்களுக்கு பிறகு இருவரையும் ஒன்றாக பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் அப்புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Share:

Related Articles