NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

G-20 மாநாட்டை புகழ்ந்த நடிகை “ஆலியா பட்”

G-20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் September 9, 10 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. இந்தியாவில் முதன்முறையாக G-20 மாநாடு நடைபெறுவதால், அதற்கான ஏற்பாடுகளை, கடந்த சில மாதங்களாக இந்திய அரசு செய்துவந்தது

G-20 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு Bollywood நடிகை ஆலியா பட் தனது X தள பக்கத்தில், “ஓர் உலகம். ஓர் குடும்பம். ஓர் எதிர்காலம். இந்தியாவுக்கு இது ஒரு வரலாற்று தருணம். G-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்.

நாடுகளுக்கிடையே ஒற்றுமையை வளர்க்கும் இந்த மகத்தான நிகழ்வைக் கண்டது பெருமைக்குரிய தருணம். உலக அரங்கில் நம் நாட்டின் தலைமை பொறுப்புக்கு இந்த உச்சி மாநாடு ஒரு சான்று” என பதிவிட்டுள்ளார்.

Share:

Related Articles