NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

 ‘Hamare Baarah’ படத்தில் நடித்த பெண்களுக்கு கொலை மிரட்டல் 

பிரபல Bollywood இயக்குநர் கமல் சந்திரா இயக்கத்தில், அன்னு கபூர், மனோஜ் ஜோஷி மற்றும் பரிதோஷ் திரிபாதி ஆகியோர் நடிப்பில் உருவானHamare Baarah திரைப்படத்தின் Trailer சில நாள்களுக்கு முன் வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்தத் திரைப்படத்துக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓர் இஸ்லாமிய உறுப்பினர் உள்பட மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்து, திரைப்படத்தை முழுமையாகப் பார்த்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.

இதனையடுத்து, இந்தத் திரைப்படம் இஸ்லாமிய சமூகத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது எனவும், இதனை வெளியிட தடைவிக்க வேண்டும் என கர்நாடக மாநில சிறுபான்மை அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையை பரிசீலித்த மாநில அரசு, கர்நாடக சினிமா ஒழுங்குமுறை சட்டம் 1964-ன் கீழ் ‘ஹமாரே பாரா‘ திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.

 இந்தப் படத்தில் நடித்த பெண்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. படத்தில் நடித்த நடிகர்களின் வீடுகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles