NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

KGF 3-ல் இருந்து இயக்குநர் ‘பிரஷாந்த் நீல்’ வெளியேறுகிறாரா?

உலகளவில் கொண்டாடப்பட்ட இந்திய திரைப்படங்களில் ஒன்று’KGF’ . முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் கண்டிப்பாக KGF படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் நாள் பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருந்தனர்.

KGF 3 கண்டிப்பாக வெளிவரும் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், அப்படத்தை இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்க போவதில்லை என தெரியவந்துள்ளது.

KGF 1 மற்றும் KGF 2 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பிரஷாந்த் நீல் KGF 3 படத்தை இயக்கப்போவதில்லை என அவரே கூறியுள்ளார். ஆனால், KGF 3 படத்தின் Hero யாஷ் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles