NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTஇல் விஜய் படம்

பொங்கல் ரிலீசாக ஜனவரி 11ஆம் திகதி வெளியாகி ஹிட் அடித்த படம் வாரிசு. விஜய்யின் 66ஆவது படமாக வெளியான வாரிசு படத்தை இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கிய நிலையில், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, சங்கீதா, ஷாம், ஸ்ரீகாந்த்,யோகிபாபு எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். தமன் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.

படம் வெளியானது முதலே குடும்பப் படமாக கொண்டாடப்பட்ட வாரிசு மற்றொருபுறம் கருத்தியல் ரீதியாக கலவையான விமர்சனங்களையும் பெற்றது.

மேலும் சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அஜித்தின் துணிவு படத்துடன் நேருக்கு நேர் மோதிய வாரிசு படம் தொடர்ந்து வசூலிலும் நிதானமாக ஹிட் அடித்தது.

கடந்த பிப்ரவரி 6ஆம் திகதி வாரிசு படம் 300 கோடி வசூலைக் கடந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், இப்படத்தில் ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பு குறித்து எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.

தமன் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆன நிலையில்,முன்னதாக் யூடியூப் தளத்தில் வெளியாகி பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில், தற்போது வாரிசு படம் வரும் பிப்.22ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமேசான் பிரைம் தளம், தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் ஆகிய பக்கங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக பொங்கல் ரிலீசாக வெளியான அஜித்தின் துணிவு படமும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றதுடன், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஒரு வார காலத்தில் 210 கோடி வசூல் சாத்தியம் என ரசிகர்கள் உள்பட பலரும் சந்தேகம் தெரிவித்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், ”மாவட்ட வாரியாக இவர்கள் தகவல் சொல்வதில்லை, கதாநாயகர்களை திருப்திப்படுத்தவே இப்படி செய்கிறார்கள்” என மறைமுகமாக இத்தகவல் உண்மையல்ல எனத் தெரிவித்தார்.

ஆனால் இந்த விமர்சனங்களை கண்டுக்கொள்ளாமல் விஜய் உள்ளிட்ட படக்குழு அனைவரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles