NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

செம்பருத்தி’ நாயகி ஷபானாவின் மற்றுமோர் புதிய சீரியல்

சன் டிவியில் பழைய சீரியல்கள் பல முடிவுக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் அப்பா-
மகள் பாசத்தை உணர்த்தும் ‘கண்ணான கண்ணே’ சீரியலானது விரைவில் முடிவுக்கு வரப்போவதாக
ஏற்கெனவே தகவல் வெளிவந்துள்ளது.இந்நிலையில் தற்போது மற்றுமோர் புதிய தொடர் குறித்த தகவல்
வெளிவந்திருக்கின்றது. அதாவது ‘மிஸ்டர் மனைவி’ என்ற பெயரில் ஒளிபரப்பாக இருக்கும் இந்தத்
தொடரில் சீரியல் நடிகை ஷபானா கதையின் நாயகியாக நடிக்க உள்ளார்.
இவர் ஏற்கெனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ என்ற சீரியல்களின்
வாயிலாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கின்றார்.

Share:

Related Articles