NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

War 2 படத்தில் இவர் தான் வில்லனா?

ஹ்ரித்திக் ரோஷனின் War 2ம் பாகத்தில் ஜூனியர் NTR ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. War படத்தின் இரண்டாம் பாகத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார்.

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் ஜூனியர் NTR பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். எனினும் படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் பிறந்த நாளை கொண்டாடிய ஜூனியர் NTRக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஒரு வித்தியாசமான வாழ்த்தை பகிர்திருந்தார்.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தாரக். இந்த நாள் மகிழ்ச்சியாகவும், வரும் ஆண்டு ஆக்‌ஷன் நிறைந்ததாகவும் அமைய வாழ்த்துகிறேன். யுத்தபூமியில் உங்களுக்காக காத்திருக்கிறேன் நண்பா. உங்கள் நாள் மகிழ்வும், அமைதியும் நிறைந்திருக்கட்டும்.. நாம் சந்திக்கும்வரை” என்று கூறியிருந்தார்.

இதன் மூலம் வார் 2′ படத்தில் ஜூனியர் என்டிஆர் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள.

Share:

Related Articles