திட்டம் இரண்டு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் G.Vபிரகாஷ் மற்றும் கௌரி கிஷன் நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் அடியே.
பள்ளி பருவத்தில் இருந்து கதாநாயகியை ஒருதலையாக காதலித்து வருகிறார் கதாநாயகன் பள்ளியின் கடைசி நாளில் எப்படியாவது தனது காதலை செந்தாளிணியிடம் கூறி விடலாம் என முடிவு செய்கிறார் ஜீவா.
ஆனால், அவர் காதல் சொல்ல போகும் நேரத்தில் அவருடைய தாய் தந்தை இருவரும் விபத்தில் இறந்த செய்தி வருகிறது. தனது தாய், தந்தையின் மரணத்திற்கு பின் சொந்த வீட்டை இழந்து நடுத்தெருவில் நிற்கும் ஜீவா, நண்பனின் வீட்டிற்கு குடியேறுகிறார்.
இப்படியே சில ஆண்டுகள் செல்ல அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் தவித்து வரும் ஜீவா, இனி உயிருடன் இருக்க வேண்டாம் என முடிவு செய்து தற்கொலை முயற்சி செய்கிறார். இந்த நேரத்தில் அவருடைய ஒருதலை காதலி செந்தாளிணியின் குரல் தொலைக்காட்சியில் கேட்க தற்கொலை முயற்சியை கைவிட்டு, செந்தாளிணி தேடி தனது காதலை சொல்ல போகிறார்.
படத்தின் முதல் பாதி சற்று தொய்வு இருந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சென்றது. ஜஸ்டின் பிரபாகரன் பாடல்கள் மனதை தொடவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவு சிறப்பு.