NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சூர்யா நடிப்பில் தனி படமாக உருவாகும் “Rolex”

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் தான் “விக்ரம்” இதில், விஜய் சேதுபதி, Fahath Fazil, காயத்ரி, காளிதாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இதில் நடிகர் சூர்யா “Rolex” என்ற வேடத்தில் நடித்திருந்தார். இந் நிலையில், Rolerx கதாபாத்திரத்தை வைத்து தனி திரைப்படம் உருவாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யா, சமீபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார். அப்போது தனது அடுத்த படங்கள் குறித்து கூறியுள்ள அவர், “Rolex” கதாபாத்திரத்தை வைத்து லோகேஷ் கனகராஜ் தன்னிடம் கதை சொன்னதாகவும்

அதில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்கிறார்கள். தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு Octobar மாதம் தொடங்க இருக்கிறது.

Share:

Related Articles