NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜெயிலர் படத்தின் கதை இப்படி தான் இருக்குமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ரோஃப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.இப்படத்தின் அறிவிப்பு கிலிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.இந்நிலையில், ஜெயிலர் படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி,ஜெயிலர் படத்தின் போஸ்டர் மற்றும் இரண்டு கிலிம்ப்ஸ் வீடியோக்களிலும் ரஜினி ஒரே கலர் சட்டையை அணிந்துள்ளதால் இப்படம் ஒரே நாளில் நடப்பதை போன்ற கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது.ஃபிளாஷ்பாக் காட்சிகளை கொண்டு ஒரே நாளில் நடக்கும் கதையாக இப்படத்தை நெல்சன் உருவாக்கியுள்ளார் என பேசி வருகின்றனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 

Share:

Related Articles