NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனது ஹீரோவுடன் துபாயில் வலம்வரும் வெங்கட்பிரபு.. யாரா இருக்கும்..?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

கஸ்டடி’ திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘கஸ்டடி’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, துபாயில் இப்படத்தின் பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில், “திரைத்துறையில் 16 வருடங்கள், தற்போது துபாயில் எனது ஹீரோ யுவன் ஷங்கர் ராஜாவுடன் ‘கஸ்டடி’ பின்னணி இசை பணியில் ஈடுப்பட்டுள்ளேன். மன்னிக்கவும் பிரேம் ஜி. அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles