NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்-விக்னேஷ் சிவன்

உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “மாமன்னன்” இப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வசூல் குவித்து வரும் நிலையில் இப்படத்திற் அரசியல் தலைவர்கள், சினிமா  பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் நேர்மறையாக  விமர்சனங்கள்  கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த   விக்னேஷ் சிவன் தன் Twitter பக்கத்தில் ‘’மாரி செல்வராஜின்  கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்.

வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்
முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில்
முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் வடிவேலு சார்  இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை என்று தனது கருத்தை  தெரிவித்துள்ளார்.





Share:

Related Articles