NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரூ.100 கோடி – வசூலில் மிரட்டும் விஜய் சேதுபதியின் மகாராஜா

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

சுதன் சுந்தரம் மற்றம்ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

படம் வெளியாகி வெற்றிகரமாக அதன் 2 ஆம் வாரத்தில் நுழைந்துள்ளது. இப்படம் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டு தெலுங்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அரண்மனை 4 – க்கு பிறகு 50 கோடியை தாண்டும் திரைப்படமாக மகாராஜா அமைந்துள்ளது. இப்படம் நேற்றுவரை 82 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles