NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 30 பேரிடம் இன்று பூர்வாங்க விசாரணை முன்னெடுப்பு..!

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 30 பேரிடம் இன்று பூர்வாங்க விசாரணை முன்னெடுக்கப்பட்டது. 

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் தியாகராஜா யோகராஜா மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் ஆகியோரின் தலைமையில் குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, காணாமல் போனோர் விவரங்கள் இதுவரையில் 21,630 க்கு மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர், முப்படையினரையும் உள்ளடக்கி உள்ளது.

இதில் 14 ஆயிரத்து 988 விண்ணப்ப படிவங்கள் விசாரணைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 6688 விண்ணப்ப படிவங்கள் பூர்வாங்க விசாரணைகள் நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 3800க்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவதாரிகளுக்கு ரூபா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கொடுப்பனவு அவர்களுக்கான இழப்பீட்டுக்காண கொடுப்பளவு அல்ல எனவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவே வழங்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுவரையில்  காணப்படாமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இதுவரையில் செய்து முடிக்கப்பட்ட பூர்வாங்க விசாரணை படி 3000-க்கும் அதிகமானவர்களுக்கான காணப்படாமலுக்கான சான்றிதழ் வழங்குவதற்கு பதிவாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மேலதிக விசாரணைக்காக 830 விண்ணப்ப படிவங்கள் தொடர் விசாரணைகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

மேலும் 17 பேருடைய விண்ணப்பபடிவங்களில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை முழுமையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதில் மூவர் உயிருடன் இல்லாத காரணத்தினால் இவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிவதற்காககவும், ஏனைய 14 பேருடைய விண்ணப்ப படிவங்களும் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles