எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மின்னல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதேவேளை, மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.