NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்னும் 4 நாட்களில்.. ‘கொட்டுக்காளி’

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுப் பல

விருதுகளையும் வென்றுள்ளது. இந்த படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 23 ஆம் திகதி அன்று வெளியாக உள்ளது.

‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தைப் பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சூரி பகிர்ந்துள்ள அந்த போஸ்டரில் படம் வெளியாக இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles